அமெரிக்கா: ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

அமெரிக்காவின் பஹாமா தீவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நிலக்கரி சுரங்க அதிபர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் கடலுக்குள் விழுந்து கிடக்கும் காட்சி.
ஹெலிகாப்டர் கடலுக்குள் விழுந்து கிடக்கும் காட்சி.
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் பஹாமா தீவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று புளோரிடா மாநிலத்துக்கு புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டரில் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும் நிலக்கரி சுரங்க அதிபருமான கிரீஸ் கிரைன் மற்றும் அவரது மகள் உள்பட மொத்தம் 7 பேர் பயணித்தனர். 

கிராண்ட் கே என்ற தீவு பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கடலுக்குள் விழுந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், மீட்பு குழு வருவதற்கு முன்னர் ஹெலிகாப்டரில் இருந்த கிரீஸ் கிரைன் மற்றும் அவரது மகள் உள்பட அனைவரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைபற்றிய மீட்பு படையினர் அவற்றை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com