சுற்றுலா சென்றபோது சோகம்: கேபிள் கார் மீது மரம் விழுந்து 6 பேர் பலி

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மர்கா பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்ற கேபிள் கார் மீது மரம் விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலியாகினர்.
சுற்றுலா சென்றபோது சோகம்: கேபிள் கார் மீது மரம் விழுந்து 6 பேர் பலி
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மர்க் கொண்டாலா பகுதியில் இன்று காலை சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்குள்ள ஸ்கை ரிசார்ட்டில் கேபிள் காரில் மகிழ்ச்சியாக பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மேலே சென்று கொண்டிருந்த கேபிள் கார் மீது மரம் ஒன்று திடீரென சாய்ந்தது. இதில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். பாலத்த காற்று வீசயதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தது டெல்லி  சாலிமார் பாக் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜெயந்த் அண்ட்ராஸ்கர், அவரது மனைவி மனேசா அண்ட்ராஸ்கர், அவர்களது மகள்கள் அனகா மற்றும் ஜான்வி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com