திருமாவளவனுக்கு தலைவர்கள் வாழ்த்து - மு.க.ஸ்டாலினிடம் நேரில் ஆசி பெற்றார்

இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருமாவளவன்
திருமாவளவன்
Published on

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் தனது தந்தை தொல்காப்பியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு சென்று மாலை அணிவித்து வணங்கினார்.

பின்னர் கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தனர். வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டினார்.

ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பெண்களுக்கு தையல் மி‌ஷன் வழங்கினார். அந்த பகுதி ஏழை மக்கள் பயன் பெற குளிர்சாதன சவப்பெட்டியை வழங்கினார். தொடர்ந்து சாந்தோம் காது கேளாதோர் பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்.

திருமாவளவனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும் செல்போன் மூலமும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், தி.மு.க. ஆர்.எஸ்.பாரதி, நடிகர் நாசர், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, போலீஸ் அதிகாரி ரவி உள்பட ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com