மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி:

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

அதன்படி இடஒதுக்கிடு கோரிய மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இட ஒதுக்கீடு உரிமை, ஆனால் அடிப்படை உரிமை ஆகாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com