உத்தரபிரதேசம்: ஆக்ரா அருகே டேங்கர் லாரியுடன் டிராக்டர் மோதிய விபத்தில் 5 பேர் உடல் கருகி பலி

உத்தரபிரதேசம் அருகே டேங்கர் லாரியுடன் டிராக்டர் மோதிய விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
உத்தரபிரதேசம்: ஆக்ரா அருகே டேங்கர் லாரியுடன் டிராக்டர் மோதிய விபத்தில் 5 பேர் உடல் கருகி பலி
Published on: 


உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள விரிதாவனில் இருந்து இன்று காலை திரும்பிக்கொண்டிருந்த டிராக்டர், டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட தீயில் சிக்கி 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து குறித்து அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com