ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி

ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீசில் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 37.3 ஓவர்களில் 135 ரன்னில் சுருண்டது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
Published on

செயின்ட் லூசியா :

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 37.3 ஓவர்களில் 135 ரன்னில் சுருண்டது.

அதிகபட்சமாக குல்பாடின் 51 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 39.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், குல்பாடின் 2 விக்கெட்டும், முகமது நபி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதன்மூலம் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com