ஒரே நாளில் 25 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, 25 சட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது.
ஒரே நாளில் 25 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று தமிழ்நாடு மது விலக்கு 2-ம் சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார்.

அதில் வெளிநாடுகளுக்கு ‘பீர்’ ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற வகையில் மது விலக்கு சட்டத்தை தகுந்தவாறு திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா உள்பட மொத்தம் 25 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதமா, தமிழ்நாடு, பல்கலைக் கழகங்கள் சட்ட திருத்த மசோதா, திருமணங்களை பதிவு செய்யும் சட்ட திருத்த மசோதா, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றுதல் சட்ட திருத்த மசோதா, பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்ட திருத்த மசோதா, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகளை முறைப்படுத்தும் சட்ட மசோதாக்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

சட்டசபை கூட்டத் தொடர் மொத்தம் 24 நாட்கள் நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது..

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com