20 ஓவர் ஆட்டம் - சேப்பாக்கத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. #WIvIND #INDvWI
20 ஓவர் ஆட்டம் - சேப்பாக்கத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை
Published on

சென்னை:

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கினர்.

குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1,200 ஆகும். சி மற்றும் டி ஸ்டாண்டின் கீழ் பகுதி இருக்கைக்கான இந்த டிக்கெட்டுகள் 6 நம்பர் கவுண்டரில் விற்பனை செய்யப்பட்டது.

குறைந்த பட்ச விலையான ரூ.1,200-க்கான டிக்கெட்டுகளை வாங்குவற்குதான் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட கியூவில் நின்றனர். டிக்கெட் கிடைத்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.12 ஆயிரம் (‘ஜி’ ஹாஸ்பிட்டாலிட்டி குளிர்சாதன வசதி பாக்ஸ்) ஆகும்.

ரூ.2,400 (இ ஸ்டான்டின் மேல்பகுதி), ரூ.4 ஆயிரம் (அண்ணா பெவிலியன்), ரூ.4,800 (சி, டி மற்றும் இ ஸ்டாண்டின் ஹாஸ் பிட்டாலிட்டி ஏ.சி. பாக்ஸ், ‘எச்‘ ஸ்டாண்டின் கீழ் பகுதி ஏ.சி. பாக்ஸ்) ரூ.8 ஆயிரம் (பெவிலியன் டெரஸ், ‘எச்‘ ஹாஸ்பிட்டா லிட்டி ஏ.சி. பாக்ஸ்) ஆகிய விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனையானது.

ஆன்லைன் மூலமும் டிக்கெட் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது. www.paytm.com என்ற இணைய தளம் மூலம் டிக்கெட் பெறலாம். #WIvIND #INDvWI

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com