

பீஜிங்:
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்தில் தற்போது பனிப்பொழிவும், பனிமூட்டமும் கடுமையாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள ஃபுயாங் நகரில் உள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலை இன்று பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்தது.
இந்த பனிமூட்டத்துக்கு இடையில் அவ்வழியாக சென்ற சுமார் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பல வாகனங்கள் தீபிடித்து எரிந்தன. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் 19 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.