காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 12 பேர் பலி

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் சோபியான் பகுதிகளில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள், இரு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் இருவரும் உயிரிழந்தனர்.
காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் 12 பேர் பலி
Published on

ஸ்ரீநகர்:

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சோபியானில் டிரகாட் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல், கச்தூரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் இருவரும், பொதுமக்களில் இருவரும் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், இன்று அதிகாலை அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் என தெரிவித்துள்ளனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com