மும்பை: கைரானி சாலையில் உள்ள கடையில் தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு

மும்பையின் கைரானி சாலையில் உள்ள கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை: கைரானி சாலையில் உள்ள கடையில் தீ விபத்து - 12 பேர் உயிரிழப்பு
Published on

மும்பை:

மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 12 பேர் பலியானார்கள்.

மும்பையின் கைரானி சாலையில் உள்ள ஒரு கடையில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் கட்டிடத்தின் உள்ளே பலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தீயில் சிக்கி கொண்டனர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சென்று தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் பலியானார்கள்.

மேலும் பலர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தீ எரிந்துகொண்டு இருந்ததால் கூடுதலாக தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com