சொன்ன படி புது போன் அறிமுகம் செய்த மைக்ரோமேக்ஸ் - விலை ரூ. 7,499 மட்டுமே

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய இன் 2C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மைக்ரோமேக்ஸ் இன் 2C
மைக்ரோமேக்ஸ் இன் 2C
Published on

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய இன் 2C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD+ டிராப் நாட்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் T610 பிராசஸர், மாலி G32 GPU, 3GB ரேம், 32GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு  11 ஓ.எஸ்., 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போன் பிரவுன் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை மே 1 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com