காமன்வெல்த் ஹாக்கி போட்டி - அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி

வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்திய ஆண்கள் அணி
இந்திய ஆண்கள் அணி
Published on

பர்மிங்காம்:

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் இந்தியா பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com