

மாமாஎர்த் இணை நிறுவனர் கசல் அலாக், 37 ஆண்டுகளாக தான் அனுபவித்து வந்த கடுமையான மாதவிடாய் வலியை மூன்று ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்து கொண்டதன் மூலம் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாமாஎர்த் நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு ஆகியவற்றிற்கான பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக கசல் அலாக் செயல்பட்டு வருகிறார். இவர் தனது மாதவிடாய் காலத்தில் அனுபவித்த சிக்கல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்களுக்கு, ஒரு நாளைக்கு மூன்று முறை மற்றும் மூன்று வேளை ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு அணுகுமுறைகளை முயற்சி செய்து, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு பிறகு, தினமும் மூன்று ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுக்க தொடங்கியதாகவும், இதன்மூலம் படிப்படியாக தனது மாதவிடாய் வலி குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயோ இனோசிட்டால், ஒமேகா மற்றும் மெக்னீசியம் இந்த மூன்று சப்ளிமெண்டுகளையும் சேர்த்து கொண்டதால், தனது மாதவிடாய் வலி முற்றிலும் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று மூன்று சப்ளிமெண்டுகளையும் மருத்துவரின் உரிய அனுமதியுடன் மட்டுமே மாதவிடாய் காலங்களில் பெண்கள் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி, வைட்டமின் பி1 மற்றும் மெக்னீசியம் ஆகியவை மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு உதவக்கூடும் என்றும், ஆனால் அவற்றை சிகிச்சைகளாக பரிந்துரைக்க போதுமான ஆராய்ச்சி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மெக்னீசியம் மாதவிடாய் வலியை குறைக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால் ஒரு நிலையான அணுகுமுறையை நிறுவுவது கடினமாக உள்ளது.
ஒமேகா 3 சப்ளிமெண்டுகள் மாதவிடாய் காலங்களில் வலியை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால் அதற்கான சான்றுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
மயோ இனோசிட்டால் என்பது வளர்சிதை மாற்ற மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்காக பரிந்துரைக்கப்படுகிறது.
மாதவிடாய் காலங்களில் வலியை அனுபவிக்கும் பெண்கள், முதலில் ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, சப்ளிமெண்டுகளுக்கான முறையான அளவு (dose) உள்ளிட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் மற்றும் அறிவுரைகள் குறித்து பொதுவான தகவல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது எந்த வகையிலும் மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாகாது. மேலும் மருத்துவ ஆலோசனைக்கு ஒரு மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது.