பெண்களின் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு காரணமும், தீர்வும்

பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
பெண்களின் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு காரணமும், தீர்வும்
Published on

சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.

முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.

உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.

விட்டமின்கள் A, D, E, K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.

குடலில் விட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும். ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.

இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.

ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com