சத்தான கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது கேழ்வரகு. இன்று கேழ்வரகு, வெந்தயக்கீரை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி
Published on

கேழ்வரகு மாவு - 1 கப்
கோதுமை மாவு - அரை கப்
வெந்தயக்கீரை - கால் கப்
வெங்காயம் - 1
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, வெங்காயம்,
ஆய்ந்த வெந்தயக்கீரை, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] சீரகத்தூள், உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.

இந்த மாவில் கொதிக்க வைத்த தண்ணீரை(தேவையான அளவு) சிறிது சிறிதாக ஊற்றி மிருதுவாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். மாவு ஊறியதும் எடுத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி அதில் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு உடனே திருப்பி போட்டு மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சத்தான கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com