கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் சரியா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுடன், மன அழுத்தம் இல்லாமல், கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாக, அனுசரணையாக இருக்க வேண்டியது அவசியம்.
கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம், அசைவம் சரியா?
Published on

சமூகம் தழைத்தோங்க ஆண் - பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்… விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது.

கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள் இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன.

அதனால கர்ப்பிணிகளை புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்.

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்னை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை தவிர்க்கணும்.

X

Maalai Malar
www.maalaimalar.com