இரும்பு சத்து நிறைந்த பசலை கீரை சூப்

தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இரும்பு சத்து நிறைந்த பசலைக்கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இரும்பு சத்து நிறைந்த பசலை கீரை சூப்
Published on

பசலை கீரை - ஒரு சின்ன கட்டு
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
பூண்டு - மூன்று பல்
சோள மாவு அல்லது அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
பட்டர் - இரண்டு டீஸ்பூன்
பால் - 1 / 2 டம்ளர்

தண்ணீர் - ஒன்று அல்லது இரண்டு டம்ளர்

பசலைக்கீரையினை சுத்தமாக அலசி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் பட்டர் போட்டு கரைந்த பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

அடுத்து அதில் நறுக்கிய கீரையினை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

நன்றாக கீரை வெந்த பின்பு அதனை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

கீரை ஆறிய பிறகு சிறுது தண்ணீர் ஊற்றி கீரையினை அரைத்து எடுக்கவும்.

இதனை எடுத்து வைத்த தண்ணீருடன் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.

சிறு பவுலில் பால், சோள மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கட்டி வராமல் கலந்து கீரை கலவையில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் சூடு செய்து இறக்கவும்.

கடைசியாக தேவைக்கு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.

சுவையான ஆரோக்கியமான சூப் ரெடி…

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com