டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த ஒட்ஸ் பெசரெட்

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது ஒட்ஸ் பெசரெட். இன்று இந்த ஒட்ஸ் பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த ஒட்ஸ் பெசரெட்
Published on

தேவையான பொருட்கள் :

பச்சைபயிறு - 1 கப்

ஒட்ஸ் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 3

சோம்பு - 1 டீஸ்பூன்

உப்பு + எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

பச்சைபயிறை 3 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் ஒட்ஸ், காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்ற உப்பு போட்டு கரைத்து அரை மணிநேரம் புளிக்க விடவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

அருமையான ஓட்ஸ் பெசரெட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com