சத்து நிறைந்த முருங்கைக்கீரை மிளகு பொரியல்

முருங்கைக்கீரையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இன்று முருங்கைக்கீரை மிளகு பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Published on

தேவையான பொருட்கள் : 

முருங்ககைக்கீரை - 2 கப், 

பெரிய வெங்காயம் - 1, 

பூண்டு - 6 பல், 

[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு. 

தாளிக்க : 

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 

கடுகு - ஒரு டீஸ்பூன், 

சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை : 

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பூண்டை நசுக்கி வைக்கவும். 

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர், பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கவும்.

முருங்கைக்கீரை வேக சற்று தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். 

முருங்கைக்கீரை மிளகு பொரியல் ரெடி.

பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com