ஆரோக்கிய சமையல் முளைக்கீரை சப்பாத்தி

கீரைகளில் பெரும் பகுதி நீர்ச்சத்து இருக்கும். இன்று முளைக்கீரையை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆரோக்கிய சமையல் முளைக்கீரை சப்பாத்தி
Published on

முளைக்கீரை  - 1 கட்டு
இஞ்சி - 1/4 அங்குலம்
எள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய், இஞ்சியை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

கோதுமை மாவில் நறுக்கிய கீரை, அரைத்த விழுது, உப்பு, எள், ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை ஈரத்துணியில் சுற்றி 1/2 மணி நேரம் வைக்கவும்.

பின்பு எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்குப் புதினா சட்னி, தேங்காய்ச் சட்னி, தால், குருமா பொருத்தமாக இருக்கும்.

முளைக்கீரை சப்பாத்தி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com