சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு வெஜிடபிள் கிச்சடி

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது கம்பு வெஜிடபிள் கிச்சடி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு வெஜிடபிள் கிச்சடி
Published on

தேவையான பொருட்கள் :

கம்பு - 1 கப்

பச்சைப்பட்டாணி - 1/2 கைப்பிடி

கேரட் - சிறியது ஒன்று

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லி இலை - ஒரு கொத்து

எலுமிச்சை சாறு - சிறிது

தாளிக்க :

எண்ணெய், 

கிராம்பு - 3,

பிரிஞ்சி இலை - 1,

சீரகம், கடலைப்பருப்பு, முந்திரி, பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை :

கம்பை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் போட்டு தாளித்து விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

அடுத்து வெங்காயம், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கவும். 

காய்கறிகள் பாதியளவு வெந்தவுடன் ஒரு பங்கு கம்புக்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 

நன்றாக கொதி வந்ததும், கம்பு, உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு வேக விட்டு இறக்கவும். 

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இப்போது சுவையான கம்பு வெஜிடபிள் கிச்சடி தயார். 

தேங்காய் சட்னி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com