

தோசை மாவு - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
வெங்காயம் - 2
உப்பு - சிறிதளவு
மிளகு தூள் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
* பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேழ்வரகை நன்றாக சுத்தம் செய்து முளைகட்ட விடவும். முளைகட்டிய கேழ்வரகை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தோசை மாவு, உப்பு சேர்த்து நன்றாக கரைத்து , அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
* வதக்கிய வெங்காயத்தை தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெல்லிய தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான முளைக்கட்டிய கேழ்வரகு வெங்காய தோசை ரெடி.