பச்சை மொச்சை பருப்பு கூட்டு

பச்சை மொச்சையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பச்சை மொச்சை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
பச்சை மொச்சை பருப்பு கூட்டு
Published on

தேவையான பொருட்கள் :

பச்சை மொச்சை மொச்சை - கால் கிலோ

துவரம்பருப்பு - 100 கிராம்

சின்னவெங்காயம் - 50 கிராம்

சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒன்றரை கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக வேக வைத்து கொள்ளவும்.

வேக வைத்த துவரம் பருப்புடன் பச்சை மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

கடைசியாக தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இப்போது சூப்பரான பச்சை மொச்சை பருப்பு கூட்டு ரெடி.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com