மூட்டு வலி உள்ளவர்கள் கவனத்திற்கு..!உங்க பழக்கத்த கொஞ்சம் மாத்துங்க...

கடந்த 50 ஆண்டுகால மனித நாகரிக மாற்றத்தில் நமது உணவு முறைகள் முற்றிலுமாக திசை மாறிவிட்டன.
Joint pain
Published on: 

இன்றைய நவீன காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரையும் வாட்டி வதைக்கும் முக்கிய சுகாதாரப் பிரச்சனைகளில் மூட்டு வலி முதலிடத்தை பிடிக்கிறது. இந்த நாள்பட்ட வலி எதனால் ஏற்படுகிறது? இதற்கு நமது அன்றாட உணவுப் பழக்கவழக்கங்கள் எவ்வாறு காரணமாகின்றன என்பது குறித்து இயற்கை வாழ்வியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உணவு முறை

மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் முதல் நாம் அருந்தும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று வரை அனைத்தும் நாம் உட்கொள்ளும் உணவின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஆனால், கடந்த 50 ஆண்டுகால மனித நாகரிக மாற்றத்தில் நமது உணவு முறைகள் முற்றிலுமாக திசை மாறிவிட்டன. அன்றைய காலத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்து, தூய்மையான முறையில் உண்டு வாழ்ந்தனர்.

ஆனால், இன்றைய சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளில் விற்பனை லாபத்திற்காக ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் தாராளமாகக் கலக்கப்படுகின்றன. இது தெரிந்தும் பலர் அவசர கதிக்காக வாரத்திற்கு பலமுறை ஹோட்டல் உணவுகளை நாடுகின்றனர்.

இயற்கை வாழ்வியல் கோட்பாடுகளின்படி, சமைக்கப்பட்ட எந்தவொரு உணவுப் பொருளையும் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். அதற்கு மேல் நேரம் ஆகும்போது அந்த உணவில் மந்த நிலை எனப்படும் 'தமஸ்' குணம் உருவாகிறது.

joint pain

* அத்தகைய உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதன் மூலம், மனித உடலால் ஜீரணிக்கவோ அல்லது வெளியேற்றவோ முடியாத புதிய வேதிப்பொருட்கள் மற்றும் வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

* இந்த நச்சு வாயுக்கள் உடலின் இணைப்புகள் மற்றும் மூட்டுப் பகுதிகளில் சென்று தங்கி, அங்கிருக்கும் உறுப்புகளின் இயல்பான இயக்கத்திற்குத் தடை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாகவே கடுமையான மூட்டு வலியும் விறைப்பும் ஏற்படுகிறது.

கைவிடப்பட்ட பழக்கவழக்கங்கள்

நவீன நாகரிகம் என்ற பெயரில் நாம் கைவிட்ட சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களே பல நோய்களுக்கு முக்கிய காரணமாகின்றன. முந்தைய காலத்தில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இருந்தது. இது உடல் சூட்டைக் தணித்து, நரம்புகளுக்கு வலு சேர்த்தது. தற்போது சில நொடிகளில் குளித்துவிட்டு செல்வது ஆகாது. உடலின் உள் வெப்பத்தைச் சராசரி நிலைக்குக் கொண்டுவர, குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது நீருக்குள் உடல் அமர்ந்து குளிரூட்டப்பட வேண்டும் என இயற்கை மருத்துவம் வலியுறுத்துகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நமது சமையலறையே சிறந்த மருத்துவமனையாகவும், தாயே முதல் மருத்துவராகவும் திகழ்ந்தார். ஆனால், இன்றைய துரித காலத்தில் கணவன்-மனைவி இருவரும் பணத்தை நோக்கியே ஓடுவதால், குடும்பத்தின் ஒட்டுமொத்த உணவுப் பழக்கவழக்கமும் ஆரோக்கியமும் சீரழிந்துள்ளது. இயற்கை மனித இனத்தை அப்படிப் படைக்கவில்லை. பாரம்பரிய உணவு முறைகள், கீரை வகைகள், தானியங்கள் மற்றும் காய்கறிகளை முறையான சமையல் முறையில் உட்கொண்டு, மூதாதையர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மூட்டு வலிகள் போன்ற இன்னல்களிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com