இளைஞர்களுக்கு ஜாக்கிங் ஏன் அவசியம்..?

ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றனரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
இளைஞர்களுக்கு ஜாக்கிங் ஏன் அவசியம்..?
Published on

இளைஞர்களுக்கு 'ஜாக்கிங்' எனப்படும் ஓட்டப்பயிற்சி ஏன் அவசியம் என்பதை விளக்கமாக பார்ப்போம்.

* ஒரு மணி நேரம் ஜாக்கிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, பிட்டான தோற்றம் கிடைக்கிறது.

* நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சினைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

* ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்த ஓட்டம் சீராகப் பாய வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.

* உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.

* ஜாக்கிங் செய்யும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்து, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.

* ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

* கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் வலிமை பெறுகின்றன.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

* ஓட்டப்பயிற்சி மற்றும் ஜாக்கிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com