ஆரோக்கியமான காலிஃப்ளவர் சூப்

தினமும் காலையில் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆரோக்கியமான காலிஃப்ளவர் சூப்
Published on

நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),
பால் - ஒரு கப்,
மிளகுத்தூள் - சிறிதளவு,
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 5 பல்,
நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவைக்கேற்ப.

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.

2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.

சூப்பரான சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com