சத்து நிறைந்த கேரட் - உருளைக்கிழங்கு சூப்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சூப் வகைகளை தினம் ஒன்றாக நாமே வீட்டில் எளிமையான முறையில் ஆரோக்கியம் குறையாமல் செய்து சாப்பிடலாம்.
சத்து நிறைந்த கேரட் - உருளைக்கிழங்கு சூப்
Published on

கேரட் - 1,
உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
உப்பு - தேவையான அளவு,
மிளகுத்தூள் - தேவையான அளவு,
வெண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மத்தால் லேசாக மசித்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான கேரட் - உருளைக்கிழங்கு சூப் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com