சத்து நிறைந்த கேரட் - மிளகு சூப்

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேரட், மிளகு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த கேரட் - மிளகு சூப்
Published on

மிளகு - 1 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 100 கிராம்
பிரியாணி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1
கேரட் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள்,
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை,
கொத்தமல்லி தழை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் தேவைக்கு

வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்பை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, சீரகம், பிரியாணி இலையை போட்டு கிளறவும்.

அதனுடன் வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்.

மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி போதுமான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.

4 விசில் வந்ததும் இறக்கி அதனுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு இறக்கி மிதமான சூட்டில் பருகலாம்.

சூப்பரான கேரட் - மிளகு சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com