சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது நல்லது. இன்று ஸ்வீட் கார்ன், பாதாம் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்
Published on

கார்ன் முத்துக்கள் - ஒரு கப்,
பாதாம் - 10
ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு,
சர்க்கரை - சிட்டிகை,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

செய்முறை :

ஸ்பீட் கார்ன் முத்துக்களை வேகவைத்து கொள்ளவும்.

பாதம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரிக்கவும்.

உரித்த பாதாமுடன் வேக வைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

அதனுடன் சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மேலே க்ரீம் ஊற்றி பரிமாறவும்.

சூப்பரான சத்தான வேக வைத்த ஸ்வீட் கார்ன் பாதாம் சூப் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com