அவர் எங்கே என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்

ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துக்குமார் இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்று கூறினார். #Peranbu
அவர் எங்கே என்று எங்களை தேட வைத்துவிட்டார் - யுவன் ஷங்கர் ராஜா வருத்தம்
Published on

ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - பேபி சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்களும், பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் நேற்று நடந்தது. 

இதில் இயக்குநர் ராம், மம்முட்டி, அஞ்சலி, ஆண்ட்ரியா, சித்தார்த், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார். வெற்றிமாறன், மிஷ்கின், கரு.பழனியப்பன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு வந்த போது ரசிகர்கள் யுவனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு யுவன் அளித்த பதில்களாவது, 

கே:- சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் கடந்தும் யுவனுக்கான அங்கீகாரம், பெரிய விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது?

ப:- அதைப்பற்றி வருத்தப்பட தேவையில்லை என்று ரசிகர்களை கைகாட்டி இதைவிட பெரிய அங்கீகாரம் எதுவுமே இல்லை என்றார். இதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்க வேண்டும் என்று எதையும் செய்யவில்லை. அந்த எண்ணமும் கிடையாது. மக்கள் மனதில் பதிந்தால் போதும். 

கே:- நா.முத்துக்குமார் இல்லாமல் நீங்கள் இணையும் முதல் படம் இது, எப்படி உணர்கிறீர்கள்?

ப:- இந்த படத்திற்காக இசையமைக்கும் போதே எங்கே அவர் என்று எங்களை யோசிக்க வைத்தார். சில பாடல்கள் எழுதும் போது இதற்கு முத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். அவர் எங்கேயும் போகவில்லை, அவருடைய வரிகள் இங்கேதான் இருக்கிறது. ராம் பேசும் போது, முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அந்த இடம் அப்படியே இருக்கும். 

இந்த படத்தை மம்முட்டி ஒத்துக்கொண்டதற்கு நன்றி. உங்களது இடத்தில் இருந்து இந்த மாதிரியான ஒரு படத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் மகிழ்ச்சி. இதுவரை பண்ணாத முயற்சியை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு யுவன் பேசினார். #PeranbuAudioLaunch #Mammootty #Anjali

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com