யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

`8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகும் `குருதி ஆட்டம்' படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி உள்ளார். #KuruthiAatam #YuvanShankarRaja
யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு
Published on

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `இமைக்க நொடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக `பூமராங்' படம் ரிலீசாக இருக்கிறது. அதர்வா தற்போது `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் `குருதி ஆட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. யுவன் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியானது.

முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் திரில்லர் கதையாக படம் உருவாகிறது. அதர்வாவின் முழு திறமைக்கும் தீனி போடும் படமாக இந்த படமட அமையும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று வருகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KuruthiAatam #Atharvaa #YuvanShankarRaja

X

Maalai Malar
www.maalaimalar.com