என்னுடைய பலமே காதல் தான் - யுவன் ஷங்கர் ராஜா

ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யுவன், என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான் என்று கூறியிருக்கிறார். #PyaarPremaKaadhal
என்னுடைய பலமே காதல் தான் - யுவன் ஷங்கர் ராஜா
Published on

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் இசையமைப்பாளரும், படத்தின் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும் போது, 

நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். 

ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல், நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார். #PyaarPremaKaadhal #HarishKalyan #YuvanShankarRaja

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com