”வெல்கம் பேபி கேர்ள்” : ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை..!

இந்த தகவலை இருவரும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Deepika Padukone and Ranveer Singh
Published on

பேபி கேர்ள்

நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். 'வெல்கம் பேபி கேர்ள்' என்று எழுதப்பட்ட ஒரு கால்பாதத்தின் புகைப்படத்தை தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார்.

பெற்றோர்

கடந்த 2018 ல் திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோன் ரன்வீர் சிங் தம்பதியினர் 2024-ஆம் ஆண்டுமுதல் பெண் குழந்தையான துவாவை வரவேற்று பெற்றோர் ஆகியிருந்தனர்.

இதற்கு முன்னர் மூத்த மகள் துவா பிறந்ததையும் இருவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றாக அறிவித்து மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.

இரண்டாவது குழந்தை

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களது இரண்டாவது கர்ப்பம் குறித்த செய்தியை ஏப்ரல் 19, 2026 அன்று , ஒன்றாக இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்தனர்.அந்த அறிவிப்பில், அவர்களது மகள் துவாபடுகோன் சிங், கர்ப்பப் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

தற்போது தங்களின் இரண்டாவது குழந்தை பிறப்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.குழந்தையின்பிறப்பிற்கு திரை நட்சத்திரங்கள் ,ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். துவா இப்போது ஒரு சின்ன தங்கைக்கு அக்கா ஆகியிருக்கிறாள், என்று நடிகை கீர்த்தி சனோன் வாழ்த்துகளை தெரவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com