மெர்சலை வரவேற்கும் விசிறி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தை வரவேற்கும் விதமாக ‘விசிறி’ படக்குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.
மெர்சலை வரவேற்கும் விசிறி
Published on

இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய விஜய் – அஜித் ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு ‘விசிறி’ என்ற படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை ஜே சா புரொடக்‌ஷன் மூலமாக எ.ஜமால் சாகிப்-எ.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் வெற்றி மகாலிங்கம், தனது மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் “மெர்சல்” படத்தை வரவேற்று வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com