பொங்கல் ரேசில் களமிறங்கும் விமல்

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்னர் வகையறா’ படம், பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கிறது.
பொங்கல் ரேசில் களமிறங்கும் விமல்
Published on

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் சிறப்பு. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com