விஜய்யின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சர்சைகளுக்கு இடையே வரவேற்பை பெற்றிருக்கும் `மெர்சல்' படத்திற்கு இடையே விஜய்யின் அடுத்த ரிலீஸாக `மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி' ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு
Published on

ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் பல அரசியல் கட்சிகள் களம் இறங்கின. திரைத்துறையினரும் `மெர்சல்' படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com