புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த `ஆளப்போறான் தமிழன்' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. #Mersal #AalaporanThamizhan #Vijay
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்
Published on

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியிருக்கிறது.  

ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் வரிகளில் கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் சொல்லம் வரிகளில் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது. 

அட்லி இயக்கிய இந்த படத்தில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #AalaporanThamizhan #Vijay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com