கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் நடிகர் விஜய்

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். #Karunanidhi #Vijay
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் நடிகர் விஜய்
Published on

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், சர்கார் படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகர் விஜய், காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரித்தார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், சூரி உள்ளிட்டோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KauveryHospital #Vijay

X

Maalai Malar
www.maalaimalar.com