ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் விஜய் சேதுபதி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் பெருமை விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. #VijaySethupathi
ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் விஜய் சேதுபதி
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் ரிலீசாகி இருந்த நிலையில், அவர் தற்போது, 96, சூப்பர் டீலக்ஸ், ஜுங்கா, சீதக்காதி, சயீரா நரசிம்ம ரெட்டி, டிராபிக் ராமசாமி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இதுதவிர ஒரு சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ரஜினியின் தம்பி, நண்பன், வில்லன் என எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இன்னமும் தெரியவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. 

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து வரும் நிலையில், ரஜினி படத்திலும் அடுத்த மாதம் இணையவிருக்கிறார். 

இதன்மூலம் ஒரே நேரத்தில் மூன்று சூப்பர்ஸ்டார்களுடன் நடிக்கும் நடிகர் என்ற பெருமை விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. #VijaySethupathi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com