இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு: விஜய்

கரு படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு என்று இயக்குனர் விஜய் கூறியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு: விஜய்
Published on

இயக்குனர் விஜய் இயக்கிய முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான லைகாவின் ‘கரு’ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இவர் தற்போது இயக்கியுள்ள ‘கரு’ படத்தில் நாக சௌர்யா, சாய் பல்லவி ஜோடியாக நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் விஜய் - சாம் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

இது குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, ‘சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் சிஎஸ். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அசத்துபவர் அவர். இந்த படத்தின் அவரது பாடல்கள் எனது எல்லா படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான். இந்த பாடல்களை போலவே படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாக கூறுவேன்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com