யோகி பாபுவை பாராட்டிய விஜய்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபுவை, நடிகர் விஜய் பாராட்டியிருக்கிறார். #CoCo #YogiBabu
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
Published on

நயன்தாரா அடுத்து நடிக்கும் கோலமாவு கோகிலா படத்துக்காக ஒரு பாடல் வெளியிடப்பட்டு பிரபலமாகி இருக்கிறது. யோகிபாபு நயன்தாராவிடம் காதலை சொல்வதை போல அமைந்திருக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். 

யோகிபாபு இந்த பாடல் பற்றி கூறியது ‘இந்தப் படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக் கொண்டே இருப்பேன். முன்பு ஒரு நடிகையுடன் பேருந்தில் ஆடி பாடுவது போல எடுத்தபோது அந்த நடிகை என்னை தொட்டு நடிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் நயன்தாராவுக்கு பெரிய மனது என்று சொல்லும் யோகிபாபு, ஒரே நேரத்தில் அஜித், விஜய் என இருவருடனும் நடித்து வருகிறார். பாடலை விஜய் பார்த்துவிட்டு யோகிபாபுவை பாராட்டி இருக்கிறார். விரைவில் அஜித்திடமும் பாடலை காண்பிக்க உள்ளார் யோகிபாபு. #CoCo #YogiBabu #Nayanthara #Vijay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com