இணையத்தை மிரட்டிய மெர்சல் டீசர் போஸ்டர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படத்தின் டீசர் போஸ்டர் ஒன்று வெளியாகி இணைய தளத்தை வைரலாக பரவி மிரட்டியுள்ளது.
இணையத்தை மிரட்டிய மெர்சல் டீசர் போஸ்டர்
Published on
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ல படம் மெர்சல். அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக இப்படத்தின் டீசரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அட்லியின் பிறந்தநாளான செப்டம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதற்கு முன்னதாக டீசர் போஸ்டர் ஒன்று, இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் காளை மேல் விஜய் கை வைத்து நிற்க, அருகில் நித்யாமேனன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு உட்காந்திருக்கிறார். அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி மிரட்டி வருகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com