விஜய் பார்க்காத துரோகமும் இல்ல, எதிரிகளும் இல்ல - நண்பனின் நெகிழ்ச்சி

விஜய் பார்க்காத துரோகமும் இல்ல, எதிரிகளும் இல்ல என்று அவரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
விஜய்
விஜய்
Published on

சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து டிரெண்டாக்கினார்கள். இது விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்தது. மேலும் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டாப் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay  #LongLiveVIJAY’ என்று பதிவு செய்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com