ஒரே நாளில் இணையத்தை கலக்கிய விஜய், சிவகார்த்திகேயன்

விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தங்களுடைய படங்களின் பாடல்களை வெளியிட்டு இணைய தளத்தை கலக்கி இருக்கிறார்கள்.
ஒரே நாளில் இணையத்தை கலக்கிய விஜய், சிவகார்த்திகேயன்
Published on

அதன்படி இன்று விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நீதானே...’ மற்றும் ‘மெர்சல் அரசன்...’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று வெளியிட்டார்கள். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அதிகமாக பகிர்ந்து டிரெண்டாகி உள்ளது.

அதுபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்...’ என்ற பாடலின் வரிகள் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com