விஜய் 62 படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay62 #Thalapathy62
விஜய் 62 படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22-ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Vijay62 #Thalapathy62 

X

Maalai Malar
www.maalaimalar.com