காதலர்களுக்கு `பார்ட்டி' கொடுக்க வெங்கட் பிரபு திட்டம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் `பார்ட்டி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கசிந்திருக்கிறது.
காதலர்களுக்கு `பார்ட்டி' கொடுக்க வெங்கட் பிரபு திட்டம்
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் படம் `பார்ட்டி'. 

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

காதலர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் விதமாக பார்ட்டி படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டிருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com