ரஜினி பிறந்தநாளுக்கு `பார்ட்டி' கொடுக்கும் வெங்கட் பிரபு

ரஜினிகாந்த் பிறந்நாளை முன்னிட்டு வெங்கட் பிரபு பிரமாண்ட `பார்ட்டி' கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் `பார்ட்டி'. 

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். 

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பார்ட்டி படத்தின் டீசர் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினி ரசிகர்களுக்கும் பார்ட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com