அமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி

சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி, அமைதிக்கு மறுபெயர் விஜய் என்று கூறியிருக்கிறார். #Vijay #Sarkar #Varalakshmi
அமைதிக்கு மறுபெயர் விஜய்: வரலட்சுமி
Published on

சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு அடுத்து விஜய்யுடன் நடிக்கும் 'சர்கார்' படம் வெளியாக இருக்கிறது.

விஜய் பற்றி அவர் அளித்த பேட்டியில், 'அமைதிக்கு மறுபெயர் விஜய். நான் அதுக்கு நேரெதிர். படப்பிடிப்பில் எல்லோரிடமும் பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பேன். மாறாக, `சர்கார்’ ஆடியோ லான்ச்லதான் அமைதியா இருந்தேன். நாம பேசுறது அங்கே இருக்கிற பெரிய ஆள்களுக்கெல்லாம் புரியணும்ங்கிறதுக்காக பொறுமையாக பேசினேன்.

விஜய் சார், என்னோட கதாபாத்திரத்துல வேறு யாரும் இவ்வளவு திறம்பட நடிச்சிருக்க முடியாதுன்னு மேடையில சொன்ன பாராட்டை வாழ்நாளில் மறக்க முடியாது. லாஸ் வேகாஸ்ல `சர்கார்’ சூட்டிங்ல இருந்தப்போ, நான் இங்கே இருந்து தனியாதான் டிராவல் பண்ணிப்போனேன்.

முருகதாஸ் என்கிட்ட, `எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பியேம்மா; இப்போ எப்படி தனியா வந்த; டிராவல்ல யார்கிட்ட பேசிக்கிட்டிருந்தன்னு கேட்டார். `விமானத்துல பக்கத்து சீட்ல இருந்தவரோட பேசிக்கிட்டிருந்தேன் சார்’னு சொன்னேன். முருகதாஸ் சார் செம ஜாலி டைப். ஸ்பாட்ல அவரும் நானும் விஜய் சாரை கலாய்ச்சுக்கிட்டே இருப்போம்’ என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com