

`மெர்சல்' போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் கையில் இருக்கும் மண்ணை தட்டும்படி போஸ் கொடுத்திருந்தார். அதனைதொடர்ந்து `மெர்சல்' படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. அதில் ஒரு மேஜிக் கலைஞருக்கான உத்திகளுடன் நிற்கும் விஜய், சீட்டுக்கட்டை சிதறவிடும்படியாக அந்த போஸ்டர் இருந்தது.
இந்த இரு போஸ்டர்களுமே விஜய் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டதுடன் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. அதேபோல் அஜித்தின் `விவேகம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகளவில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் `மெர்சல்' படத்திற்கும் அஜித்தின் `விவேகம்' படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இந்த இரு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்தது ஒருவர் தான்.